செவ்வாய் 20, ஏப்ரல் 2021  
img
img

தூற்றினால் தூற்றட்டும்.. கவலைப்படாதீங்க.. நமக்கு 40+21தான் முக்கியம்.
சனி 23 பிப்ரவரி 2019 17:04:47

img

புதுச்சேரி:

40 தொகுதிகள் மட்டுமல்ல, இடைத்தேர்தல் வரவுள்ள 21 தொகுதி சட்டமன்றத் தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும். கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரீகமாக பதில் சொல்வோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும், எந்த காலத்திலும் பாமக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 3 வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள பாமகவிற்கு 10 தொகுதிகளை கேட்டுப்பெறும் தகுதி உள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகர பகுதி மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜிகே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் 1000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அதிமுக - பாமக - பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெற செய்வதென ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும் உற்சாகத்துடன் இந்த தீர்மானத்தை பாமக நிறைவேற்றியது. பின்னர் கட்சி யினரிடையே டாக்டர் ராமதாஸ் பேசினார். அவரது பேச்சிலிருந்து... புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெல்ல கடுமையாக உழைப்பது அவசியம். தமிழகத்தில் 3 வது பெரியக்கட்சியாக வளர்ந்துள்ளோம். பெரியகட்சிகள் பாமகவை அழைப்பதற்கு தொண்டர்கள் உழைப்பும், வியர்வையும், போராட்டமும், சிறைவாசமும்தான் காரணம்.

7 மக்களவைத் தொகுதிகள் ஒரு ராஜ்யசபா தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலரும் வயிறு எரிக்கின்றனர். பத்து தொகுதி கேட்டோம், கூட்டணி என்பதால் 7 மக்களவைத்தொகுதிக்கு ஒற்று கொண்டோம். பாமக யார் முதுகிலும் குத்தியது கிடையாது. காலையும் வாரிய தில்லை.அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி. கூட்டணி வைத்தபோதும் கொள்கையை எக்காலத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் நாம் தேக்குமரம். கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையை விட்டு பேரம்பேசுவதில்லை.

பத்து அம்ச கோரிக்கைகள் கூட்டணியின்போது முன்வைத்தது பற்றி வேறு கட்சிகள் சொல்லமாட்டார்கள். 7 தமிழர்கள் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, இடைத்தேர்தல் வரவுள்ள 21 தொகுதி சட்டமன்றத்தொகுதிகளிலும் இக்கூட்டணி வெல்ல வேண்டும். ஜூன், ஜூலை உள்ளாட்சித் தேர்தலில் கை கோர்க்கும் நிலை பலப்படுத்தும். கண்ணியத்தோடு பேசுங்கள், பழகுங்கள். யார் தூற்றினாலும் கவலைப்படாதீர்கள். தேர்தல் முடிந்த பிறகு நாகரீகமாக பதில் சொல்வோம். அப்போதும் கண்ணியம் தவறக் கூடாது என்பது அன்புமணியின் கட்டளை. நாற்பதும் நமதே என்று ராமதாஸ் தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img