`பி.ஜே.பி-யோடும் பா.ம.க-வோடும் கூட்டணி முடிவான குஸ்தியில் இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள், மேடைதோறும் தி.மு.க-வை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். மறுபுறம், அ.தி.மு.க கூடாரம், பி.ஜே.பி மீதும் பா.ம.க மீதும் பாசமழை பொழிய ஆரம்பித்துவிட்டது. நேற்று கோவையை அடுத்த காளப்பட்டியில் நடந்த 7 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல அம்மா பேரவை நிர்வாகிகளுக்கான ஆலோனைக் கூட்டத்தில் வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலில் மைக் பிடித்த துணை சயாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ``நடைபெற இருக்கும் தர்ம யுத்தத்தில் தி.மு.க மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சமூக விரோத கருணாநிதி (மறைந்த முன்னாள் முதல்வர்) குடும்பம்தான் ஜெயலலிதா மறைவுக்குக் காரணம். மானமுள்ள அ.தி.மு.க தொண்டர்கள் தி.மு.க-வை வீழ்த்த வேண்டும். அப்போதுதான், 40 எம்.பி-க்களும் தமிழகத்திலிருந்து டெல்லிக்குச் சென்று, மோடி தலைமையில் அமையும் ஆட்சியிடம் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உட்பட அனைத்துப் பிரச்னைகளையும் பேசி நமக்கான உரிமைகளைப் பெற முடியும்’’ என்றபடி அமர்ந்தார்.
அடுத்ததாகப் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ``நெருக்கடிகளையும் சோதனைகளையும் கடந்து அம்மாவின் ஆட்சி இரண்டு ஆண்டுகளைக் கடந்து, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. நமது கூட்டணியில் பா.ம.க-வும் பி.ஜே.பி-யும் இணைந்துள்ளன. அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. அ.தி.மு.க மத்தியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதுதான் எம்.ஜி.ஆர்.ஸ்டைல். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான நூறு சதவி கிதத்துக்கான வாய்ப்பு பி.ஜே.பி-க்குதான் இருக்கிறது.
ஆகவே, அ.தி.மு.க எம்.ஜி.ஆரின் பாணியைப் பின்பற்றியிருக்கிறது. திட்டங்களைக் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் ஆதரவு தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் தேவைப்படும். பி.ஜே.பி-யின் கொள்கைகள் தனி. அ.தி.மு.க கொள்கைகள் தனி. அ.தி.மு.க சிறுபான்மையினரின் நலனை விட்டுக் கொடுக்காது. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெல்லும். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் ஸ்டாலினைப் பற்றிப் பேசாத பேச்சையா… பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் பேசியிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணி அமைத்ததிலிருந்து, ஸ்டாலினுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை’’ என்று முடித்தார்.
இறுதியாகப் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``இவ்வளவு நேரம் கடந்தும் மதிய சாப்பாடு சாப்பிடாமல் நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள். இதுவே தி.மு.க கூட்டமாக இருந்தால் இந்நேரம் ஐந்து பிரியாணி கடைகளில் அடிதடி நடந்து இருக்கும். எடுத்த திட்டங்களில் எல்லாம் அ.தி.மு.க வெற்றிகரமாகச் செயல்படுவதைப் பார்த்து, ஸ்டாலினால் தாங்க முடியவில்லை. `அ.தி.மு.க-வில் தொண்டர்களே இல்லை’ என்று அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சொன்னார்.
`அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை’ என்றார் ஸ்டாலின். ஆனால், உண்மையான அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமை யிலானது என்பதை பி.ஜே.பி உணர்ந்துள்ளது. அதனால்தான் நாட்டை ஆளும் தேசியக் கட்சியே அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்தால் போதும் என 5 சீட்டுகளைப் பெற்றுள்ளது. அம்மாவின் ஆளுமையை, கனிவை, மதிநுட்பத்தைப் போலவே எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், அம்மாவின் ஆன்மா எடப்பாடியார் உடலுக்குள் இறங்கிவிட்டது. இதைச் சொல்வதால் மற்றவர்கள் கோபித்துக்கொண்டாலும் பர வாயில்லை’’ என்று சீரியஸாகப் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் குற்றம் சொல்வதை குலத் தொழிலாகக் கொண்டுள்ளார். சிறப்பாக நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டையையும் வேட்டியையும் கிழித்துப் பார்த்துவிட்டார் ஸ்டாலின்.
இனிமேல் கிழிப்பதற்கு உள்ளாடை மட்டும்தான் உள்ளது. அரசியலில் கத்துக்குட்டியான கமல்கூட, `என் திட்டத்தைக் காப்பி அடிக்கிறீர்கள்' என்று உங்களைப் பார்த்து ஏளனம் செய்யும் நிலையில்தான் தி.மு.க இருக்கிறது.’ வாக்கு வங்கி இழந்தவர்களுடன் கூட்டணி வைத்திருக்கி றாரா மு.க.ஸ்டாலின். பூஜ்யத்துடன் எத்தனை பூஜ்யம் சேர்ந்தாலும் பூஜ்யம்தான் வரும். காங்கிரஸ் கட்சியே தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க யோசிக்கி றது. எதிர்காலத்தில் வரும் முட்டையைப் பார்த்து யாரும் மொட்டைபோடத் தயாரக இல்லை. மாதிரி சட்டமன்றம், மாதிரி கிராமசபை என்று சொல்லி வரும் ஸ்டாலினை, இப்போது மக்கள் எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர். சபரீசன் தப்புத் தப்பாக ஸ்டாலினுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அ.தி.மு.க கூட்டணியைப் பார்த்ததும் இப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு எல்லோரும் யோசிக்கின்றனர்’’ என்று முடித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்