img
img

மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை
வெள்ளி 22 பிப்ரவரி 2019 14:02:15

img

மதுரை:தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியிருக்கிறார். கூட்டணி நட வடிக்கைகள் குறித்து பேசியிருக்கலலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் முக்கிய ஆலோசனை களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இன்று தமிழகம் வந்துள்ளார். விமானம் மூலம் மதுரை வந்த அவர்... லோக்சபா தேர்தல் தொடர்பாக.. 18 தொகுதி பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் எதிர்வரும் லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்... அவர் மதுரை விமான நிலையம் அமித் ஷா வந்தார். அதே தருணத்தில் சென்னையில் இருந்து விமானம் மூலம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை வந்தார்.அமித் ஷா வருகையை அறிந்த அவர், விமான நிலையத்தில் அவரை சந்தித்தார். அவருடன் அமைச்சர் தங்கமணியும் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், வியூகங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும், தேமுதிகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக சில ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தவிர... எதிர்வரும் தேர்தலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img