விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தூத்துக்குடி தொகுதிக்கு உடபட்ட திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், ஓட்டப்பிடாரம் பகுதிகளின் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பறிமாறப்பட்டது. இதற்காக 2000 கிலோ மட்டன் , 2000 கிலோ சிக்கன் பிரியாணி என விருந்து களைக்கட்டியது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி ஜெயிக்க வேண்டும். அதற்காக சிறப்பாக தேர்தல் பணியாற்றுங்கள். சிறப்பாக செயலாற்றி அதிக வாக்குகளை கனிமொழி அவர்களுக்கு பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு 100 பவுன் தங்க காசு பரிசளிக்கப்படும்" என அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ள திமுக நிர்வாகிகள், பரிசினை தட்டிச் செல்லும் பொருட்டு, கனிமொழி அவர்களை 5 லட்சம் வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என சூளுரைத்து செயல்பட்டு வருகின்றனர். அனிதா ராதா கிருஷ்ணனின் இந்த அதிரடி அறிவிப்பு திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்