சென்னை: மெகா கூட்டணியா இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டுமே தவிர, தாங்களே சொல்லிக் கொள்ள கூடாது என்று கமல்ஹாசன் அதிமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிடும் மய்ய வேட்பாளர்களின் பட்டியலை வரும் 24-ம் தேதிக்குப் பிறகு வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி யின் தலைவர் கமல்ஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து அவர் பேசியபோது சொன்னதாவது: பல இடங்களில் கொடி ஏறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு மக்களுக்குதான் தெரியும்.
இந்த ஓர் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. மக்களிடையே எங்களுக்கு நல்ல தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் என்னை ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த மக்கள் பலம் இருப்பதால்தான் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன், தனியே நிற்போம் என்றால் நான் தனித்து அல்ல.. நாம் நிற்போம்... என்பது!
மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால் கணிப்புகளை தாண்டி ஆதரவு உள்ளது, மக்கள் என் கையை பிடித்து நாடி பார்த்தில் புத்துயிர் இருப்பதால் நம்பிக்கையுடன் அனுப்பி இருக்கிறார்கள்" என்றார் கமல்ஹாசன். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கமல் சொன்னதாவது: மெகா கூட்டணி என்கிறார்கள். அது மெகா கூட்டணியா இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது.
வரும் 24ம் தேதிக்கு பிறகு மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். அதில் கண்டிப்பாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மக்கள் நலன் என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் ஆகும். கொள்கைகளை கட்டுக்கட்டாக புத்தகம் போட்டவர்கள் தற்போது அதை பறக்க விட்டு விட்டனர். கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள்" என்று கமல்ஹாசன் கடுமையாக சாடினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்