புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டமும் அதிகரித்தது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்த உத்தரபிரதேச வீரரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத் அங்கு சிறிது பேசிக்கொண்டிருந்தார் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் யோகிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்த உண்மை செய்து தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்டது எனவும் அதில் யோகி ஆதித்யநாத்துடன் பிகார் ஆளுநர் லால்ஜி டண்டன், உத்தரப்பிரதேச அமைச்சர்கள் அஷுடோஷ் டண்டன் மற்றும் மோசின் ராசா ஆகி யோரும் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் இப்போது இறந்தது யாராக இருந்தாலும் இறுதி சடங்கில் சென்று சிரிப்பது தவறான விஷயமே என கருத்து க்கள் எழ ஆரம்பித்துள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்