சென்னை:
அதிமுக, பாமக, பாஜக இடையே கூட்டணி அமைந்ததால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.லோக்சபா தேர்தலில், அதிமுகவானது சுறுசுறுப்பை காட்டி வருகிறது. பாமக, பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகு திகள் அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். இது குறித்து பேசிய ஸ்டாலின், அதிமுகவை விமர்சித்து புத்தகமே வெளியிட்டுள்ள பாமக, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்று ஸ்டாலின் பேசினார். அதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:அதிமுக. பாமக, பாஜக இடையே கூட்டணி அமைந்ததில் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அதிமுகவில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.
அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அதிமுக கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலனுக்கான கூட்டணி என்று அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்