img
img

அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி
வெள்ளி 15 பிப்ரவரி 2019 17:45:56

img

தேர்தல் புயல் கரையை நெருங்கும் வேளையில், கூட்டணி மேகங்கள் இருளத் தொடங்கிவிட்டன. தி.மு.க கூட்டணிக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டு க்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்ட வேளையில், தங்கள் பக்கமும் ஒரு வலுவான அணி அமைக்க அ.தி.மு.க முனைப்புக்காட்டி வருகிறது. அ.தி.மு.க-வுடன் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தோடு பி.ஜே.பி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சார்பாக, அவரின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க 14 தொகுதிகளில் போட்டியிட்டு, திருப்பூர் தொகுதியில் மட்டும் இரண்டாமிடம் பெற்றது. மற்ற 13 தொகுதிகளிலும் மூன்றாமிடமே அக்கட்சிக்குக் கிடைத்தது. 5.2 சதவிகித வாக்குகளுடன், மூன்றாமிடம் பெற்ற பி.ஜே.பி-க்கு அடுத்த இடத்தை அந்தத் தேர்தலில் தே.மு.தி.க பெற்றது. 

அடுத்து வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் 103 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க-வுக்கு 2.4 சதவிகித வாக்குகளே கிடைத்தன. இந்த வாக்குகளை அடிப்படையாக வைத்துதான், தே.மு.தி.க-வுடன் தொகுதிப் பங்கீட்டை பி.ஜே.பி மேற்கொண்டிருக்கிறது. 

பா.ம.க ஒருபுறம் அ.தி.மு.க-வுடனும், பி.ஜே.பி-யுடனும் பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. கூட்டணி பற்றிப் பேசிக்கொ ண்டிருக்கிறோம் என்பதை, இரு தரப்புமே வெளிப்படையாகத் தெரிவித்துள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து தே.மு.தி.க, மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். 2014 தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் போட்டியிட்டபோது, எங்க ளுக்கு 14 தொகுதிகளும் பா.ம.க-வுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. பின்னர் நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் எங்களின் வாக்கு சதவிகிதம் 2.4 ஆக குறைந்தது. அதை அடிப்படையாக வைத்து, மூன்று தொகுதிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பி.ஜே.பி பேச்சு நடத்துகிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளும், விஜயகாந்த் மீதுள்ள பற்றால் விழும் வாக்குகளும் எங்களுக்கு எப்பவும்போல விழும். 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு சறுக்கல், அவ்வளவுதான். மேலும், தென் தமிழகத்தில் டி.டி.வி.தினகரனை எதிர்கொள்ள பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணியில் எங்களால் மட்டுமே முடியும். இதையும் மேற்கோள்காட்டி, பா.ம.க-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே எண்ணிக்கையில் தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு, இப்போது மூன்று தொகுதிகளுக்குள் எங்களால் சுருக்கிக்கொள்ள முடியாது’’ என்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img