அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து குழு போடுவதற்கு முன்பே அக்கட்சியின் சீனியர் அமைச்சரான செங்கோட்டையனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி வேலையை தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக வும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டது. முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக இருக்க வேண்டும். ஆகவே நீங்க தான்னே இந்த குழுவிற்கு தலைமை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனிடம் சொல்ல, என்ன மாதிரியான குழு என்று திரும்பிக் கேட்டுள்ளார் செங்கோட்டையன். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவது என பதில் கூறியிருக்கிறார் எடப்பாடி.
நம்மக்கிட்ட கூட்டணி கட்சியா? அதான் மக்களுக்கே தெரிஞ்சிப்போச்சே எந்தெந்த கட்சியின்னு... அதுல நான் என்ன பேசவேண்டியிருக்கு... அம்மா இருக்கும்போது, கூட்டணியே இல்லாம தமிழ்நாட்டுல 37 சீட்டு ஜெயிச்சோம். இப்ப நாம கூட்டணி கட்சிக்கு அதிக சீட்டு கொடுக்க வேண்டியிருக்கும். அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். நீங்களே பேசி முடிச்சுக்கோங்க. என்னை விட்டுவிடுங்க என பதில் கூறினாராம் செங்கோட்டையன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்