தமிழகத்தில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சட்ட சபையில் இரண்டாம் நாள் விவாதமான இன்று மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில், ''டிக் டாக்'' எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள் சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்த செயலியால் உருவாகும் வீடியோக்கள் பல வன்முறையை தூண்டி விடுகிற, சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துகிற ஒன்றாகவும். வெளியாகும் வீடியோக்கள் ஆபாசமாக சித்தரிக்க ப்பட்டும் வருகிறது எனவே அரசு இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், இதேபோல் இதற்கு முன் ப்ளுவேல் என்ற உயிரை கொல்லும் விளையாட்டானது தடை செய்யப்பட்டது. அந்த ப்ளுவேல் கேம் தொடர்பான சர்வர் அமெரிக்காவில் இருந்தது. அங்கு தொடர்புகொள்ளப்பட்டு அந்த கேம் தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த டிக் டாக் ஆப்பின் தலைமை இடம் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆப்பிற்கு விரை வில் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழசைசவுந்தரராஜன்,தம்பிதுரையின் மக்களவை பேச்சு அதிமுகவின் கருத்தாக இருக்காது என்பது எனது கருத்து. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை மறுநாள் ஈரோடு வருகிறார். கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலில் போட்டி யிடுவேன். தமிழகத்தில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான் என கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்