திரிபுராவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடியும் அம்மாநில முதல்வர் பிப்லம் குமார் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் பெண் அமைச்சரிடம் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. இது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, திரிபுரா முதல்வர் பிப்லம் குமார் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் சமூக நலத்துறை அமைச்சர் சந்தனாவின் இடுப்பில் கை வைக்கிறார். அதனை உணர்ந்த சந்தனா அமைச்சரது கையைத் தட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனையடுத்து திரிபுரா எதிர்க்கட்சிகள் மனோஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. திரிபுரா பாஜக சார்பில், சம்பந்தப்பட்ட பெண் அமைச்சர் இதுவரையில் எந்தப் புகாரும் தெரி விக்காதபோது எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்