திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: "அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற தவியாய்த் தவித்து அங்குமிங்கும் அலையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க அரசு அடிக்கும் கொள்ளைகளையும், அமைச்சர்களும் முதலமைச்சரும் ஈடுபட்டுள்ள இமாலய ஊழல்களையும், நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி, தேர்தல் லாபம் எனும் மிகக்குறுகிய நோக்கில், மூடி மறைக்கும் கீழ்த்தரமான முயற்சியில் மத்திய அரசே ஈடுபடுவது வெட்கக்கேடா கவும் வேதனையாகவும் இருக்கிறது.
18 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி, ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது வருகின்ற மக்களவைத் தேர்தலுடனும் அதற்கு இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என்று மத்திய பா.ஜ.க அரசு திரைமறைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், அரசியல் சட்டத்தின்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி மிகவும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை மத்திய அரசு முடக்கி வைத்தது. ஊழல் டிஜிபி ஒருவர் பதவியில் நீடிக்க மத்திய அரசு நேரடியாக உதவிசெய்து ஒத்துழைக்கிறது.
ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் என்ற வகையில், 84 கோடி ரூபாய் பணம் கொடுத்த வழக்கினை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக “க்ளோஸ்” பண்ண வைத்து, அதைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வீராவேசமாகப் பேசிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களை, ஊழல் விசாரணையிலிருந்து பா.ஜ.க அரசு தப்பிக்க வைத்தது.
அரசுக்கு எதிராகவே வாக்களித்த திரு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்யாத அ.தி.மு.க அரசை இரு கரமும் இணைத்து வாரியணைத்து பாசத்தைப் பொழிந்து, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
சிறப்பு நீதிமன்றத்தால் மூன்று வருடம் சிறைத்தண்டனை பெற்ற பிறகும்' முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி தானாகவே காலியான நிலையிலும், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷனுக்கு மத்திய பா.ஜ.க அரசு இன்னமும் கடுமையான நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்