மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண நலம் பெற்று இன்னும் 7 -10 நாள்களுக்குள் வீடு திருப்புவார் என முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 30வது நாளாக மருத்துவமனையில் உள்ள அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று முன்தினம் தங்கள் ஊருக்குப் புறப்பட்டு சென்றனர். புறப்படும் முன்பு, இங்குள்ள டாக்டர்கள் குழுவிடம், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகளை தொடர வேண்டும் என்பது குறித்தும் பட்டியலிட்டு கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, அதன்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள சீமா, மேரி ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சையும் அவருக்கு நல்ல பலனளித்து வருவதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரிப்பதற்காக தினமும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அப்பல்லோ வந்து செல்கின்றனர். அந்தவகையில் நேற்று, தமிழக முன்னாள் கவர்னர் ராம்மோகன் ராவ், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எச்.வி.ஹண்டே, சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கல்யாண், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் சரவணன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரித்து சென்றனர். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஹண்டே, "முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அமெரிக்காவுக்கு மேல் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. அவரால், இனி நடக்க முடியாது என்றார்கள். அப்போது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தென்கொரியாவில் இருந்து பிசியோ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தென்கொரிய நிபுணர்கள் அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளித்தனர். அதையடுத்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நாடு திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து வீறு நடைபோட்டு வந்தார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர் என்ற முறையில் விசாரிப்பதற்கு வந்தேன். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைச் சந்தித்தேன். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அது நல்ல பலன் அளித்துள்ளது. அவர் இன்னும் 7 முதல் 10 நாட்களில் வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு ராஜாஜியின் புத்தி கூர்மையும், எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கும் இருக்கிறது" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்