img
img

சிறுவர்களுக்கிடையே தகராறு... சிறுமியை கட்டையால் அடித்துக் கொன்ற பெண்..!
புதன் 06 பிப்ரவரி 2019 14:04:09

img

பள்ளி சிறுவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக, சிறுவனின் சகோதரியான 3ம் வகுப்பு பள்ளி மாணவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த இரக்கமற்றப் பெண்ணை வழக்குப் பதிவு செய்து கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர் போலீசார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மங்களம் கிராமத்தினை சேர்ந்தவர் விவசாயி முருகவேல் அழகுஜோதி தம்பதியினர். இவர்களுடைய 2 மகன்களும், ஒரு மகளும் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். அதே ஊரில் வீட்டின் அருகே இருந்த செல்வராஜூவிற்கும் இவரது குடும்பத்திற்கும் நீண்ட காலமாக இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இவ்வேளையில், சமீபத்தில் செல்வராஜூவின் குழந்தைகளுக்கும், முருகவேல் குழந்தைகளுக்கும் வீட்டின் அருகே சண்டையிட்டுள்ளனர். சிறுவர்கள் தகராறு பெரியவர்கள் தகராறு ஆக, செல்வராஜூவிற்கு ஆதரவாக அவரது உறவினர் கார்த்திக்கின் மனைவி சந்திராவும் சண்டையிட்டிருக்கின்றார். " அவர்கள் இரு குடும்பத்திற்குமான சண்டையில் உன்னுடைய தலையீடு எதற்கு..?" என சந்திராவினை ஊரார்க் கண்டிக்க பிரச்சனை அப்பொழுது சுமூகமாகியுள்ளது.

ஆனால் ஆத்திரம் தீராத சந்திரா, ஞாயிற்றுக்கிழமையன்று கடைத்தெருவிற்கு சென்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் முருகவேலின் மகள் விஜய லெட்சுமியை தன்னுடைய வீட்டிற்கு இழுத்து வந்து உருட்டுக்கட்டையால் தாக்க மயங்கியுள்ளார் அச்சிறுமி. மயங்கி விழுந்த சிறுமி விஜயலெட்சுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இதுகுறித்து தந்தை முருக வேல் அளித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் டி, எஸ்,பி, சண்முகசுந்தரம்(பொ) உத்தரவின் பேரில் கடலாடி இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்கு பதிந்து கொலையாளி சந்திராவை கைது செய்து மதுரை சிறைக்கு அனுப்பி வைத்தார். ஆத்திரத்தில் ஏழு வயது சிறுமியை அடித்துக்கொலை செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img