திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

பாஜக கூட்டணிக்கு சசிகலா எதிர்ப்பு! திகைப்பில் எடப்பாடி!
புதன் 06 பிப்ரவரி 2019 13:59:35

img

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் எப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்கப் போகிறது? என்கிற எதிர்பார்ப்பு இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் எதிரொலித்தபடி இருக்கிறது. 

அதற்கேற்ப இரு கட்சிகளும் தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதில் தனித்தனியாக வேகம் காட்டி வருகின்றன. இதற்காக, பல ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், பல கூட்டணி கணக்குகள் கடைசி நேரத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தைகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ஊழல் கட்சி என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது அகில இந்திய பாஜக தலைமை! மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியண்ணன் பாணியில் அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்திருக்கும் பாஜக தலைமை, தங்களுக்கான தொகுதிகளை தாங்களே எடுத்துக்கொள்ளும் அரசியலை அதிமுகவில் புகுத்தி வருகிறது. 

பாஜகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், பாஜக முன்வைக்கும் மிரட்டல்களும் கோப்புகளும் கூட்டணிக்கு அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், பாஜக கூட்டணிக்கு கட்சியின் சம்மதத்தைப் பெறுவதற்காகவும், கூட்டணி குறித்த அபிப்பிராயத்தில் சுருதிபேதம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தான், அதிமுக மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை வரும் 8-ந்தேதி எடப்பாடியும் பன்னீரும் கூட்டியுள்ளனர். இதில் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில், "சசிகலாவிடமிருந்து வந்த ஒரு தகவலால் அதிர்ச்சியடைந்திருக்கிறார் எடப்பாடி!" என்கிற தகவல் அதிமுக தரப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்த போது, "எடப்பாடி தலைமையில் அதிமுகவும் ஆட்சியும் இருந்தாலும் எடப்பாடிக்கு எஜமானர் இப்போதும் சசிகலாதான். அதனால், சசிகலாவிடமிருந்து எடப்பாடிக்கு அவ்வப்போது உத்தரவுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இது ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாகத்தான்  உத்தரவுகள் வரவில்லை.

இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி சம்மதித்துள்ளார் என்கிற தகவல் அறிந்து டென்சனாகியிருக்கிறார் சசிகலா. எடப்பாடியின் முடிவை இளவரசியிடம் பகிர்ந்துகொண்ட சசிகலா, 'தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக் கூடாதுங்கிறது என்னோட சபதம்! ஆனா, அந்த பாஜகவின் வெற்றிக்கு கம்பளம் விரிக்கிறார் எடப்பாடி. அதற்காகத்தான், அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கிறார்கள்' என கோபம் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என தம்பிதுரை மூலமாக எடப்பாடிக்கு தகவலை பாஸ் பண்ணியிருக்கிறார் சசிகலா. இந்த தகவல்தான் தற்போது எடப்பாடியை திகைக்க வைத்துள்ளது.

சசிகலாவின் தீவிர விசுவாசியான தம்பிதுரை, சசியின் விருப்பத்தை தெரிந்து கொண்டதால் தான் பாஜக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பொது வெளியில் பகிரங்கமாக சொல்லி வருகிறார். மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு எதிரான குரலை வலிமைப்படுத்த மா.செ.க்க ளிடம் ரகசியமாக பேசி வருகிறார் தம்பிதுரை. இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் ரகசிய  கட்டளைக்கு எடப்பாடி பணிவாரா ? அல்லது சசிகலாவின் உத்தரவை உதாசீனப்படுத்துவாரா? என்பது மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே தெரியும் " என்கிறார்கள்  அதிமுக சீனியர்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img