தஞ்சாவூர் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் மூலம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையே இல்லை என்பதை செயலால் நிரூபித்திருக்கிறார் சசிகலா நடராஜன். இது சசிகலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சசிகலா புஷ்பாவுக்கான பதிலடியாகவே கருதப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற காரணமே சசிகலா நடராஜன்தான்; சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னவர் சசிகலா புஷ்பா. அத்துடன் ஜெயலலிதாவின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்த போகிறார்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடப் போகிறார்; அதிமுக துணைப் பொதுச்செயலராகப் போகிறார் என கூறிவந்தார். ஆனால் சசிகலா புஷ்பா கூறியபடி எதுவுமே நடக்கவில்லை. 2011-ல் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டு 2012-ல் மீண்டும் வந்தபோது தாம் வெளியிட்ட அறிக்கையில் அரசியலில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்ததை தற்போது செயல்படுத்திக் காட்டியுள்ளார் சசிகலா நடராஜன். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி சசிகலா நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: கடந்த மூன்று மாதமாக பத்திரிகைகளில் என்னை பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1984ல் முதல் முறையாக அக்காவை சந்தித்தேன். பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவர் என்னை தங்கையாக ஏற்றுக் கொண்டார். 1988ல் இருந்து அக்காவின் போயஸ் கார்டன் வீட்டில் அவருடன் வசித்து வந்தேன். அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் அக்காவின் பணிச்சுமையை ஓரளவாவது குறைக்கும் வகையில் உதவியாக இருந்தேன். அப்போது வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு முழு விவரம் தெரியாது. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நான், கடந்த டிசம்பரில் அக்காவை பிரிந்து வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. பிறகுதான் அதுவரை வெளியில் என்ன நடந்தது என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்தது. அக்கா எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பிறகுதான் அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் புரிந்தது. என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததை சாக்கிட்டு, என் பெயரை பயன்படுத்தி விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர்; அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்பட்டன; பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன; அக்காவுக்கே எதிரான சதி திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்துள்ளன. அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேன். கனவிலும் அக்காவுக்கு துரோகம் நினைத்ததில்லை. என் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு வேண்டாதவர்கள்தான். அவர்களுடன் தொடர்புகளை துண்டித்து விட்டேன். இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. அரசியலில் ஈடுபட வேண்டும், கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு கிடையாது. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் அக்காவுக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன். இவ்வாறு சசிகலா கூறியிருந்தார். தற்போது ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட நேரடி அரசியலுக்கு வராமல் 2012-ல் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி சசிகலா புஷ்பா தரப்புக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார் சசிகலா நடராஜன்!
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்