நாமக்கல்:
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.ஆசிரியர்கள் போராட்டம் தீவிர மாகும்போதே, அதாவது கடந்த 5 தினங்களுக்கு முன்பே இது சம்பந்தமாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரி வித்திருந்தார்.
"அரசு ஊழியர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதே. அவை எல்லாம் ஒன்றும் புதிய கோரிக்கைகள் இல்லை, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள்தான். அவற்றை நிதி சுமை காரணமாக நிறைவேற்றாமல் நிறைவேற்ற முடியவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டு ள்ளது. உண்மையிலேயே அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிக நிதி தேவைப்படாது என்பதால் உடனடியாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது ஒருவாரம் ஆகியும் இன்றும் போராட்டம் வலுத்து வருவதால், அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து மீண்டும் கருத்து கூறி உள்ளார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:"ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது. அரசு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வினை உடனடியாக எடுக்க வேண்டும். மாணவர் தேர்ச்சிக்கு ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அளிக்கும் விரிவான அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்