டெல்லி:
இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 7,214.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் மட்ட குழு நடைபெற்றது. இதில், கஜா புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வில்லை.
ரூ.14, 910 கோடி கேட்கப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு ரூ.1,714 கோடி மட்டுமே ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாஜக - சிவசேனா இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் வறட்சி நிவாரணப் பணிக்காக ரூ.4,714 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதே போல், வறட்சி நிவாரணமாக கர்நாடகத்துக்கு ரூ 949.47 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.900.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது.
மேலும், இமாச்சலப்பிரதேசத்துக்கு ரூ. 317.44 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 191.73 கோடி ரூபாய்க்கும் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 127.60 கோடி குஜராத்திற்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 13.09 கோடி ரூபாயும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்