அடுத்ததாக "10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறை யில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது" என்று சொல்லி இருக்கிறார். மத்திய பிரதேச தேர்தலில் 5 லட்சத்துக்கும் மேல நோட்டு வாக்கு விழ காரணமே உயர்ஜாதியினர் என தெரிந்தும், அவர்களது நன்மதிப்பைப் பெறுவதற்காக 10 சதவீத இடஒதுக்கீட்டை நல்ல பெயரை சம்பாதித்து பாஜக முயன்றது என்பது நம்ம மதுரைக்காரங்களுக்கு தெரியாமலா இருக்கும்.
இன்னொரு விஷயம், இந்த எய்ம்ஸ் மருத்துவமனையால் சாமான்ய மக்களும் உயர்தர சிகிச்சை பெறலாம் என்று சொல்லி உள்ளார். இது தெரிந்தும்தான் நான்கரை வருடம் கழித்து அடிக்கல் நாட்ட வந்தாரா என்பது ஒரு புறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் 60 களிலேயே இலவச மருத்துவம் என்பது புழக்க த்தில் உள்ள ஒன்று. இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டால் எத்தனை வடநாட்டுக்காரர்கள் அதாவது ஹிந்தி மொழி பேசும் டாக்டர்கள், ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்பது நம் மாநில மக்களுக்கு இப்போதே கவலையை தந்துவிட்டது.
மொத்தத்தில் எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட், கஜா நிவாரண பாதிப்பு என இப்படிப்பட்ட விஷயங்கள் எதுவுமே தமிழகத்தில் நடக்கவே நடக்காத மாதிரி, வேற விஷயங்களை மட்டும் பேசி உள்ளதால், மோடியின் இந்த மதுரை வருகை ஒன்னும் சொல்லிக் கொள்கிற மாதிரியும் இல்லை, நினைச்சு பெருமைபட மாதிரியும் எதுவும் நடக்கவில்லை.