வெள்ளி 22, அக்டோபர் 2021  
img
img

ஏகப்பட்ட ஆண்களுடன் தொடர்பு.. இடையூறாக இருந்த மகள்.. மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்
சனி 26 ஜனவரி 2019 17:17:02

img

சேலம்: சேலம் மாவட்டம் வீரகனுர் அருகே இலுப்புனத்தம் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதிதான் சிவசங்கர், பிரியங்கா. இவர்க ளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவள் பெயர் ஷிவானி!

இந்நிலையில் நேற்று முன்தினம், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் பார்த்தனர். அப்போது, கிணற்றில் பிரியங்காவும், ஷிவானியும் இருந்தனர். உடனடியாக அங்கிருந்த சிலர் கிணற்றில் குதித்து தத்தளித்துகொண்டு இருந்த பிரியங்காவை காப்பாற்றினார்கள். ஆனால் ஷிவானியை பிணமாகத்தான் மீட்டனர். இந்தவிஷயம் தொடர்பாக போலீசார் விசாரணை ஆரம்பித்தார்கள். அப்போது, தன்னிடம் பணம், நகைகளை கொள்ளை அடிக்கவே மர்மநபர்கள் வந்ததாகவும், அப்போது எங்கள் இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்றதாகவும் பிரியங்கா போலீசாரிடம் கூறினார்.

இந்த பதிலை கேட்டதும் போலீசாருக்கு சந்தேகம் பிரியங்காமீதுதான் விழுந்தது. ஏனெனில் அந்த இடத்தில் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்குமாம். அதுவும் இல்லாமல் பிரியங்காவிடம் நகை, பணம் எதுவும் கொள்ளை போகவும் இல்லை. வழிப்பறி செய்ததற்கான அடையாளமும் இல்லை. இதனால் போலீசார் விசாரணையை பிரியங்காவிடமே மீண்டும் பலமாக ஆரம்பித்தனர்.

அப்போதுதான் எல்லா விஷயமும் வெளியே வந்தது. அப்போது பிரியங்கா சொன்னதாவது: "கணவர் சிவசங்கர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். குழந்தையுடன் நான் தனியா இருக்கேன். எனக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருக்கு. அதனால அவர்களுடன் அடிக்கடி போனில் பேசிக்கிட்டே இருப்பேன். இந்த விஷயத்தை என் குழந்தை புருஷனிடம் போனில் பேசும்போது சொல்லிட்டாள்.

அவள் சாதாரணமாக கணவனிடம் சொன்னாலும் எனக்கு குழந்தைமீது ஆத்திரம் வந்தது. என்னுடைய கள்ளக்காதல்களுக்கு இடையூறாக நாளை வந்து விடுவாள், என் புருஷனிடம் சொல்லிவிடுவாள் என்றுதான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். இரவு நேரத்தில் கிணற்றில் குழந்தையையும் தள்ளி விட்டேன். நான் விடியும்வரை கிணற்று பக்கமே நின்றிருந்தேன். ஜனங்க காலையில நடமாட ஆரம்பிச்சதும், நான் கிணற்றில் இறங்கி தத்த ளிப்பதுபோல நடிச்சேன். இதை மறைக்கத்தான் முகமூடி கொள்ளையர்கள் வந்தார்கள் என பொய் சொல்லி நாடகம் நடத்தினேன்" என்றார். இதையடுத்து பிரியங்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img