திண்டுக்கல் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தின் சார்பாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசியல் நோக்கம் கொண்டது. 2015ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இரண்டரை லட்சம் கோடிக்கு மூலதனம் ஒப்பந்தம் கிடைத்து விட்டதாக மாநாட்டில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் வந்தது 68,000 கோடி தான். இது போல தான் இதுவும். இப்போது மூன்றரை லட்சம் கோடி வரும் என்று கூறப்ப டுவதை எப்படி நம்பமுடியும். பாராளுமன்ற தேர்தலை ஒட்டி ஒரு அரசியல் நோக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுக்கு இடையில் ஒரே மாதிரியான அணி உருவாக வாய்ப்பில்லை ஆனால் பாஜகவை தோற்கடிப்பதற்காக பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கக் கூடிய அடிப்படையில் மாநில அளவில் அணி அமைய வாய்ப்புள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் காவலர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கார் விபத்தில் மரணம் போன்ற சம்பவங்கள் ஹாலிவுட் திரில்லர் படம் போன்று உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் பதவி விலக வேண்டும். நீதி மன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறினார் பேட்டியின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட பொருப்பாளர்கள் சிலர் உடனிருந்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்