img
img

குக்கர் சின்னம் மறுப்பு... டிடிவி தினகரன் கருத்து
வியாழன் 24 ஜனவரி 2019 15:22:12

img

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதால் டிடிவி தினகரன் குக்கர்சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திந்தார். அந்த வழக்கில் பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் அதேபோல் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியும் அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், அதனை தனிப்பட்ட கட்சி உரிமைகோர முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று பெங்களூருவில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தி யாளர்களை சந்தித்தார் அப்போது குக்கர் சின்னம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதன் நடைமுறையை சொல்லியிருக்கிறது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. ஏற்கனவே நீதிமன்றம்தான் இதற்கு தடை விதித்தது என்பதால் மீண்டும் சின்னத்தை வழங்கச் சொல்லி நீதிமன்றமே உத்தரவிடுமென நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img