உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பேரணியின் போது மாயாவதி குறித்து அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ விஜய் யாதவ் தெரி வித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்ட சாதனா சிங், 'மாயாவதிக்கு சுய மரியாதையே கிடையாது. பெண் இனத்துக்கே அவர் ஒரு கறை.
அவர் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. மூன்றாம் பாலினத்தவர் போல உள்ளார் என கூறி திரவுபதியுடன் ஒப்பிட்டு பேசினார். இது அம்மாநில அரசிய லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சாதனா சிங் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மாயாவதியின் கட்சியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ விஜய் யாதவ் சாதனா சிங்கின் தலையை கொண்டுவருபவருக்கு 50 லட்சம் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்