சென்னை:
புருஷன் - பொண்டாட்டி போல இருந்தோம்... ஆனா காலத்தின் கட்டாயம் இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக்கை உபயோகிக்க கூடாது என்று அரசு உத்தரவு போட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஹைகோர்ட்டில் கேஸ் போடப்பட்டது.
ஆனால் இதனை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அத்துடன் எல்லா வகை பிளாஸ்டிக்குக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார். அப்போது, "எத்தனையோ வரு ஷங்களாக மனிதனோடு ஒன்றி இருந்ததுதான் பிளாஸ்டிக். மக்களும், பிளாஸ்டிக்கும் கிட்டத்தட்ட கணவன் - மனைவி போல இருந்தார்கள். காலத்தின் கட்டாயம் டைவர்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.
ஆனால் அரசு எல்லா பிளாஸ்டிக்கையும் ஒழிக்க சொல்லியுள்ளது உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். அதனை அரசு கண்டிப்பாக ஆராயும். அதே சமயத்தில் எல்லா வகை பிளாஸ்டிக்கிற்கும் முழுமையாக தடை விதிப்பது என்பது ஒரே நாளில் சாத்தியம் கிடையாது" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்