img
img

கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்
வெள்ளி 04 ஜனவரி 2019 15:42:21

img

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நிவாரண உதவிகளை வழங்கியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகள்  கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கின்றனர். புயலால்  அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் புஷ்பவனம் கிராமமும் ஒன்று. 

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, புயல் அடித்து பாழ்படுத்திய சமயத்தில் தனது பாடல் மூலம் புயலின் கோரத்தை உலகிற்கே சொன்னார். அதனை தொடர்ந்து  தனது கிராமத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு நிவாரண உதவியும் அளிக்க முன்வந்தார்.

அதன்படியே புஷ்பவனம் கிராமத்தில் இருக்கும் 25 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல், அருகில் உள்ள நாலுவேதபதி கிராமத்தில் கர்ப்பிணிகள் மற்றும் அண்மையில் குழந்தை பெற்ற 51 பெண்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதமும், பெரியகுத்தகை கிராமத்தில் 16 பெண்களுக்கு தலா ரூ.3 ஆயிரமமும் வழங்கினார். புஷ்பவனம் நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பசுபதி தலைமை வகித்தார். சென்னை ஆவணக்காப்பகத்தின் பதிப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற  கோவிந்தராசன், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img