திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. `பிப்ரவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும்' என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், ` நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படலாம்' என்ற மனநிலையில் இருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிராக தி.மு.க தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்தத் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
திடீரென திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துப் பல வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் அவசர இடைத்தேர்தல் வைப்பது ஏன். பாதிக்கப்பட்டவர்களில் எவரும் உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு எதுவும் செய்யவும் இல்லை. இந்நிலையில், திருவாரூருக்கு மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் என்ன. திடீர் அறிவிப்பின் ரகசியம்தான் என்ன?' எனக் கேள்வி எழுப்பிருந்தார்.
திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நிறுத்தக் கோரி பிரசாத் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டன. தி.மு.க-வில் ஸ்டாலினை போட்டியிட வைக்கும் வேலைகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால், `மீண்டும் இன்னொரு இடைத்தேர்தல் வர விரும்பவில்லை' எனக் கூறி, நிர்வாகிகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் ஸ்டாலின். இதையடுத்து, திருவாரூரில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது தி.மு.க.
அதேபோல், `ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரிலும் முத்திரை பதிக்க வேண்டும்' என நினைக்கிறார் தினகரன். `இதற்காக யாரை முன்னிறுத்துவது?' என்ற விவாதமும் அ.ம.மு.க-வில் களைகட்டியிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 பேரில் இப்போது 17 பேர் தினகரன் பக்கம் உள்ளனர். இவர்களில் ஒருவரை நிறுத்தினால் என்ன என்ற விவாதமும் நடந்து வருகிறது. தகுதிநீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ-க்கள் மீது மக்கள் மத்தியில் அனுதாப அலையும் இருக்கிறது. அந்தவகையில், தங்க.தமிழ்ச்செல்வனை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் என சில நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
ஆனால், தங்கமோ, ` இந்த 5 வருடம் முடிகிற வரையில் நாங்கள் போட்டியிட முடியாது என விதிமுறைகள் சொல்கிறதாம். எனவே, எங்கள் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள்' எனக் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த நிர்வாகிகளும், ` அப்படிச் செய்ய முடியுமா என்பதை சோதித்துப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பார்க்கலாம். கூடவே, மாற்று வேட்பாளராக திருவாரூர் மா.செ எஸ்.காமராஜ் பெயரைப் பதிவு செய்யலாம். தங்கத்தின் மனு தள்ளுபடியாகிவிட்டால், காமராஜ் வேட்பாளராகிவிடுவார்' எனக் கூறியுள்ளனர். இதுவரையில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் எதிலும் எஸ்.காமராஜ் வெற்றி பெற்றதில்லை. திருவாரூர் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அவர். ஆனால், `இந்த முறையும் உறுதியாக வெற்றி பெற வேண்டும்' என்ற முனைப்பில் இருக்கிறார் தினகரன். `மற்ற கட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் வேட்பாளரை உடனே அறிவித்துவிடுவோம். ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டால், அந்த அனுதாபம் மாற்று வேட்பாளருக்கு வந்து சேரும்' எனவும் அவர் கணக்குப் போடுகிறார்.
இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், `` கடந்த இரண்டு மாதங்களாக சுவர் விளம்பரங்களில் வேட்பாளர் பெயர் இருக்கும் இடத்தை மட்டும் நிரப்பாமல், முழுக்க குக்கர் சின்னத்தை வரைந்துவிட்டனர் அ.ம.மு.க தொண்டர்கள். திருவாரூர் தொகுதியைப் பொறுத்தவரையில் தினகரனின் சொந்த சமூகத்தை முன்னிறுத்தி சிலர் தேர்தல் வேலைகளைச் செய்கின்றனர். அப்படிச் செய்வது ஆபத்தில் முடியும் என்பதை சிலர் அறியவில்லை. களத்தில் தி.மு.க-வுக்கும் தினகரனுக்கும்தான் போட்டி என்ற சூழலை உருவாக்கும் வகையில் தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்