சேலம், டிச. 25-
நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு அறிவிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு முதற்கட்ட ஆவுக்கு அனுமதி கொடுத்தது. இது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக இதை செதுள்ளது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவேரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. இது குறித்து முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவில்லை.
மேகதாதுவில் அணைக் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தலில் கூட்டணி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த, உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளனர். அதனை சந்திக்க தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் தாமிரம் தயாரிக்க தடை என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் நிலைபாடு குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்