அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக அமைப்பு செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் திமுகவில் இணைந்ததை கரூர் மாவட்ட திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாநகர் முழுவதும் பேனர்கள் வைத்து அசத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டம் முழுவதும் அவரை வரவேற்று ஏராளமான திமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டினர். சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழா முடிந்ததும் கரூர் வரும் அவரை வர வேற்க தயார் நிலையில் இருக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், செந்தில்பாலாஜியிடம் வரும் 27ம் தேதி கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தேதி கொடுத்திக்கிறார். அந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைகின்றனர். இதில் சில தகுதி நீக்க எம்.எல்.எக்கள் கலந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கலைஞர் சிலை திறப்பு விழா முடிந்தவுடன் பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பு முறைப்படி வரும் என்கிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்