ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க தீர்மானத்துள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலாவை மட்டுமல்ல அப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர் மற்றும் முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் விசாரிக்க திட்ட மிட்டுள்ளது.
இதில் சசிகலாவிடம் கேட்பதற்கு பல கேள்விகளை தயாரித்து முன்வைத்துள்ளது ஆணையம். அதில் முக்கியமானது, ஜெயலலிதாவின் உயிர் பிரி வதற்கு காரணமாக இருதய நிறுத்தம் கார்டியாக் அரெஸ்ட் வரும்போது சசிகலா அங்கு இல்லை மற்றும் ஜெயலலிதாவின் மார்பு பகுதியில் இயந்தி ரங்கள் மூலம் மசாஜ் செய்து அவரது இதயத்தை இயக்க முயற்சித்த வேலைகளை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள்தான் செய்தி ருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு இருதய நிறுத்தம் வரும்போது சசிகலா எங்கிருந்தார்?. அவரது இருதய நிறுத்தம் வந்தபோது அதை இயங்க வைக்கும் முயற்சியில் அப்பல்லோவின் சீனியர்கள் மருத்துவர்கள் ஈடுபடாமல் உதவியாளர்களாக இருந்த அலுவலர்கள் ஏன் அதை செய்தார்கள்? என்கிற மிக முக்கியமான கேள்வியை சசிகலாவிடம் கேட்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் திட்டமிள்ளது.
இத்துடன் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை? ஜெயலலிதாவின் உறவினரான தீபக் மருத்துவமனை யில் இருக்கும்பொழுது ஜெயலலிதாலவின் உறவினரே அல்லாத சசிகலா உறவினர் என ஏன் கையெழுத்து போட்டார்? என்கிற மற்றொரு கேள்வி யும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் சசிகலாவிடம் கேட்கப்பட உள்ளது.
இந்த கேள்விகளுக்கு கிடைக்கும் பதிலையொட்டித்தான் ஜெ.வின் மருத்துவ சிகிச்சையில் சசிகலாவின் பங்கு என்ன என்பதை பற்றிய பதிலை ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் தயாரிக்க உள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்