சென்னை,
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்க ளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைந்ததும், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஏராளமான பொதுமக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வருகை தந்ததால், மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்