ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. தான் இரட்டை வேடம் போடுகிறது என்று கனிமொழிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
தமிழக செதி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது-
ஒரு ஆலை இயங்க வேண்டும் என்றால் அதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்க வேண்டும். ஆனால் மக்களின் உணர்வு களை புரிந்து கொண்டு, நியாயத்தை உணர்ந்து, போராட்டம் தொடங்கிய 40 நாட்களிலேயே ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமல் ஆலையை மூடிவிட்டோம். ஆனால் கனிமொழி எம்.பி, ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு இரட்டை வேடம் போடுகிறது என்கிறார்.
இரட்டை வேடம் போடுவது தி.மு.க.தான். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். அதன்பிறகு விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கி யதும் தி.மு.க. தான். ஆலை தொடங்கும் போது அதற்கு எதிர்ப்பாக அ.தி.மு.க. இருந்தது. ஆகையால் இரட்டை வேடம் போடுகிறவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும். தற்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்