img
img

ரூ.89 கோடி பணப்பட்டுவாடா புகாரை ஏன் விசாரிக்கவில்லை? ஐகோர்ட் கேள்வி
திங்கள் 03 டிசம்பர் 2018 18:30:48

img

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடரப்பட்டி ருந்தது. இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆர்.கே.நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில் டிடிவி தினகரன் வேட்பா ளராக அறிவிக்கப்பட்டு, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது ஆளும் தரப்பில் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.  

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரக்கண்ணு என்பவர் வழக்கு தொடர்ந்தார். திமுக சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. வைரக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தாங்கள் கேட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் தமிழக முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அபிராமபுரம் காவல்நிலையத்திற்கு பரிந்துரை செய்தாகவும் பதில் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மனு செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு அபிராமபுரம் காவல்நிலையத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை இணை ஆணையர் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறினார். வைரக்கண்ணு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் ஆணையம் புகார் அளித்தும் காவல்நிலையத்தில் இருந்து இது வரை எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை என்று வாதிட்டனர். 
 
அப்போது தமிழக அரசு இந்த வழக்கு தொடர்பாக என்ன சொல்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த வழக்கு ஏற்க னவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. 2018 பிப்ரவரி மாதம் இந்த வழக்கை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் என்று தமிழக அரசு வழக்கறி ஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த இரண்டு நிதிபதிகளும் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

பிற்பகலில் நீதிபதிகள், விசாரணைக்கு உத்தரவிட்டும் போலீஸ் இணை ஆணையர் ஏன் விசாரிக்கவில்லை? டிசம்பர் 12ஆம் தேதி காவல்துறை பதில் அளிக்க வேண்டும். பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நரசிம்மன் யார்? வழக்கு ரத்து செய்ததை எதிர்த்து அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?. வருமானவரித்துறை நடத்திய சோதனையில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று வருமானவரித்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img