சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, ''3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்றவர்களை விடுதலை செய்யும் ஆளுநர், எந்த தவறும் செய்யாத 7 அப்பா விகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்? 3 பேர் கொல்லப்பட்டதற்கும், அதிமுகவினருக்கும் முன்விரோதம் இல்லை. கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்து தீப்பிடித்தது என்கிறார்கள்.
எந்த காரணமும் இல்லாமல், முன்விரோதமும் இல்லாமல் ஒருவன் கொலை செய்தால், அவன் கொடிய வெறிப்பிடித்த ஒநாயை விட கொடியவன். இந்த மூன்று பேரும் கொடிய வெறிப்பிடித்த ஒநாயை விட மோசமானவர்கள். அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்துவிட்டு, முன்விரோதம் இல்லை, கூட்ட கலகம் என கூறியிருக்கிறார்'' என ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்