img
img

காஷ்மீரின் புதிய முதல்வராகிறார் புகாரி!
புதன் 21 நவம்பர் 2018 18:01:26

img

காஷ்மீரில் பாஜகவுடன் பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து ஆட்சி செய்து வந்தது. இந்த ஆட்சியில் முதல்வராக பிடிபி தலைவர் மெகபூபா முப்தி பதவி வகித்தார். கருத்து வேறுபாடு காராணமாக பாஜக அவர்களுக்கு தந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனை அடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சி டிசம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜனாதிபதி ஆட்சி அமைந்தபோதிலும் அங்கு இன்னும் சட்டசபை கலைக்கப்படவில்லை. 

இந்நிலையில், இந்நிலையில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.  இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரியை முதல்வர் பதவிக்கு 3 கட்சிகளும் முன்மொழிந்துள்ளன. இதில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது. கூட்டணி அமைப்பதை அல்தாப் புகாரியும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ கவிந்தர் குப்தா, இவர்கள் கூட்டணி பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தை துபாயில், பாகிஸ்தான் ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img