சென்னை, நவ. 18-
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கஜா புயல் தாக்குதலால் நாகப்பட்டினம் மாவட்டம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டும், மின்கம்பங்கள் முறிந்து போனதால் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியும் கிடக்கின்றன. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவுப் பகலாகப் பாடுபட்டு, நேர இருந்த ஆபத்துக்களை முடிந்தமட்டும் தடுத்து இருக்கின்றனர்.
தமிழக அரசின் பாராட்டத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருந்தாலும், கஜா புயலால் 51 பேர் உயிர்ப்பலி ஆனது வேதனை அளிக்கின்றது. கஜா புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை இராமநாதபுரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு பாதிப்புகளைக் கணக்கெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிசைகளை இழந்தோர் மற்றும் வீடுகள் சேதமடைந்தோர் பற்றிய விவரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்