சேலம், நவ. 18-
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; அவர் மேலும் கூறியதாவது: சமீபத்திய புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைந்துள்ளது. 471 முகாம்கள் அமைக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளது. 350 முகாம்களில் 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் தற்போது தங்கியுள்ளனர். புயலில் 1லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் சாந்துள்ளன. 20 ஆண்களும், 11 பெண்களும், 2 சிறுவர்களும் இறந்துள்ளனர்.
70 கால்நடைகள், 291 செம்மறி ஆடுகள், 1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள் இறந்துள்ளன. 105 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்ப ட்டுள்ளது. தற்போது புயல் வெள்ளம் காரணமாக தொற்று நோ பரவாமல் 230 முகாம்கள், 435 நடமாடும் மருத்துவ ஊர்தி செயல்படுகின்றன. இவ்வாறு முதல்வர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்