மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 75 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சிதான் மபியில் நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக் விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டனர். சுமார் 75 வாக்குறுதிகள் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன, அதில் பாஜகவுக்கு போட்டியாக பல திட்டங்கள் இருக்கின்றன. பட்டியலில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:
விவசாயிகளுக்கு பாதி மின் கட்டணம்.
விவசாயக் கடன் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.
வீடுகளுக்கு மின் கட்டணத்தில் முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம்.
வீடு இல்லதவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம். 450 சதுரடிக்கு வீடுகட்ட ரூ. 2.50 லட்சம் மானியத்தொகை.
ஐடி நிறுவனத்தில் 1 லட்சம் பேருக்கு பணி.
ரூ. 300ல் இருந்து ரூ. 1000 ஆக சமூக பென்ஷன் உயர்த்தப்படும்.
பெண்களுக்கு முனைவர் பட்டம் வரை இலவச கல்வி.
பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 51,000.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்