img
img

அனுஷ்காவுக்கு திருமணம்:
வியாழன் 20 அக்டோபர் 2016 07:10:25

img

நடிகை அனுஷ்காவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் நடக்க உள்ளதாம். சூப்பர் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் அனுஷ்கா. அருந்ததி படம் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது பாகுபலி 2 படத்தில் பிசியாக உள்ளார். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள், எஸ் 3 படத்திலும் பிசியாக உள்ளார். அடுத்த மாதம் அவருக்கு 35 வயது ஆக உள்ளது. இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தயாராகிவிட்டனர். திருமணம் திருமணம் அனுஷ்காவின் பெற்றோர் ஊர், ஊராக மாப்பிள்ளை பார்த்து இறுதியில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை தேர்வு செய்துள்ளார்களாம். அனுஷ்காவுக்கும், அவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 பாகுபலி 2 ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா பாகுபலி 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாகுபலி ரிலீஸான பிறகு திருமணம் செய்து கொள்ள வசதியாக அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பாகுபலி 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. தயாரிப்பாளர் தயாரிப்பாளர் அனுஷ்காவுக்கும், ஏற்கனவே திருமணமான தெலுங்கு பட தயாரிப்பாளருக்கும் இடையே காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கடந்த மாதம் டோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா சமந்தா டோலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவுக்கும், சமந்தாவுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளது. இதில் யாருக்கு முதலில் திருமணம் என்பது தெரியவில்லை.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img