``சர்கார் படத்தில் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம்'' என எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், பிற்பகல் 2.30 மணி காட்சியை ரத்து செய்துள்ள தியேட்டர் நிர்வாகம், மாலை 4.30 மணிக்கு படம் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான `சர்கார்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு கதை கரு தொடர்பாக பல சர்ச்சையைச் சந்தித்தது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் தீபாவளி அன்று பல்வேறு திரையரங்குகளில் `சர்கார்' வெளியானது. இந்த நிலையில், படத்தில் வரும் காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க-வினர் மதுரையில் அமைந்துள்ள சினிப்பிரியா திரையரங்கை முற்றுகையிட்டனர்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, "சர்கார் திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் அ.தி.மு.க அரசை கேலிசெய்யும் விதமாக இருக்கி றது. அ.தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி அவரின் பெயருக்கு பங்கம்விளைக்கும் விதமாகவும் காட்சியமைத்துள்ளனர். எனவே, இது போன்ற காட்சிகளை அமைத்து, மக்களிடத்தில் அ.தி.மு.க அரசு மீது அவதூறுகளை பரப்பும் விதமான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் படத்தை திரையிடவிடமாட்டோம். இதுகுறித்து மதுரையில் உள்ள திரையரங்கங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என தெரிவித்தார்.
இதனிடையே, சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா ஆகிய திரையரங்கில் இன்று 2.30 மணிக்கு தொடங்க இருந்த பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு ள்ளது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் சர்கார் திரையிடப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்