சென்னை காசி தியேட்டர் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு பேனர்களை கிளித்தனர்.
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவாளிக்கு வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் `சர்கார்' திரைப்படத்தால் தொடர்ந்து பல பிரச்னைகள் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி, ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். அரசு வழங்கும் இலவசப் பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அ.தி.மு.க-வினர் சர்காருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் சென்னை காசி தியேட்டர் முன்பு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க-வினர் குவியத்தொடங்கினர். உடனடியாக அங்கு வந்த விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க-வினர் பேனர்களை கிழிக்கும் முன்பு தாங்களாகவே அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீஸாரும் தியேட்டர் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சர்கார் காட்சிகள் ரத்து போன்ற எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதையடுத்து, சர்கார் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காசி தியேட்டர் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அ.தி.மு.க-வினரே சர்கார் பட பேனர்களைக் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நில வியது. இருதரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள சர்கார் பட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்