மதுரை, அக். 24-
தனது சுய லாபத்துக்காக 18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தகுதி நீக்கம் செயப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரும் தங்கள் பதவியை தகுதி இழப்பு செத பின்னர் படாதபாடு பட்டுவிட்டார்கள். அம்மாவின் அரசை காப்பாற்றுவதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை குற்றாலத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.
பதவி ஆசையை காட்டி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அம்மாவின் அரசை காப்பாற்ற குற்றாலத்தில் அடைத்து வைத்தாலும், துன்பத்தில் அடைத்தாலும் வெளியே வருவார்கள். முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் தெளிவாக கூறி வருகிறோம். எனவே தனது உயிரை தந்து அம்மா இந்த ஆட்சியை ஏற்படுத்தினார். அது போல உயிரை கொடுத்தாவது இந்த ஆட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்