சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக அதிமுக சார்பில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது. புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒப்புதல் வழங்கிய நிலையில்
சிலையின் இறுதிகட்ட வடிவமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இந்த சிலை விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய சிலைக்கான புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிலை இப்போது சாக்குப்பையில் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை பார்த்தால் அவரை மாதிரியே தெரியவில்லை என்ற விமர்சனங்கள் வந்தன. கையில் ஆறு விரல் இருப்பதாக கூட சர்ச்சை எழுந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்றாலும், ஏனோ தெரியவில்லை, ஜெயலலிதா மாதிரியே இல்லை அந்த சிலை.
இதையடுத்துதான், புதிய சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த சிலையும் கூட அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள எம்ஜிஆர் சிலை அவரை பிரதிபலிக்கும் அளவுக்கு, ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வகையில், தத்ரூபமாக இல்லை. ஜெயலலிதாவின் முழு உருவ சிலை இது வாகும். எனவே ஜெயலலிதாவின் உடல் பருமன் சிலையிலும் பிரதிபலிக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்த சிலையோ, சற்று ஒல்லியாக உள்ளது.
நெற்றி பகுதியும் உள்ளடங்கி உள்ளது. ஜெயலலிதா நின்று பார்க்கும்போது இருக்கும் கம்பீரத்தை இந்த சிலையில் வடிவமைக்க முடியவில்லை. மீண்டும் சிலை வடிவமைப்பில் மெத்தனம் நடந்துள்ளதா, அல்லது, ஜெயலலிதா சிலையை வடிவமைக்கும் திறமையுள்ள சிற்பிகள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்