``இனி அரசியல் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்போவதில்லை" அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சமூக வலைதளவாசிகளுக்கும் மீம் கிரியேட்டர்களுக்கும் நாள்தோறும் தீனி போட்டு வருபவர்களுள் ஒருவர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன். எம்.ஜி.ஆரைப் பாரதப் பிரதமர் ஆக்கியது, மன்மோகன்சிங்கை ஓ.பி.எஸ் சந்தித்ததாகச் சொல்லி பிரதமரையே மாற்றியது, புகழ்பெற்ற பாட கியைத் தன் பேச்சால், பரதநாட்டியக் கலைஞராய் ஆக்கி ‘அழகு பார்த்தது’! என இவரது ட்ரோல் வரலாறுகள் நீள்கின்றன. இந்நிலையில், பழநியில் நடந்த பள்ளி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்கள் சந்திப்புப் பற்றி புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்ட பொதுக்குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்குபெற்ற இந்தக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். தனியார் பள்ளிகளுக்கு அரசு கொடுக்க வேண்டிய பராமரிப்புத்தொகை 2 சதவிகிதத்தைப் பெற்றுத் தர வேண்டும். மழலையர் பள்ளிகளைத் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்திட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாவிட்டாலும் அரசு மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி யாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போலவே அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திலும் விலக்கு அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் அமைச்சரிடம் முன்வைத்தனர்.
கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த திண்டுக்கல் சீனிவாசன், அங்கு காத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அ.தி.மு.க-வின் தலைமை செய்தித் தொடர்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, கட்சிக் கட்டுப்பாட்டை மதிக்கும் வகையிலே, இனி அரசியல் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்போவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்