திருச்சி திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் அகோரி மணிகண்டன் தன் அம்மாவின் அவர் மீது அமர்ந்து பூஜைகள் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூஜைகள், ஏவல், சுனியம், என ஏகப்பட்ட பயிற்சிகள் கொடுப்பதாக விளம்பரம்படுத்துகிறார். இது இல்லாமல் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள், உள்ளிட்டவைகள் நடக்கும்.
இந்நிலையில் அகோரி மணிகண்டனின் தாயார் மேரி காலமானர். அவரது உடல் அடக்கம் செய்ய அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வழக்கமான இறுதி சடங்கினை அவரது உறவினர்கள் செய்தனர்.
இதன் பின்அகோரி மணிகண்டன் தனது தாயார் உடல் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு முழங்க அகோரி பூஜை நடந்தது. இதையடுத்து அம்மாவுக்கு உடலுக்கு தீபாராதனை செய்து அடக்கம் செய்தனர். இடுகாட்டில் நடந்த அகோரிகளின் விசித்திர பூஜையானது அந்த பகுதி மக்கள் பயந்து தெறித்தனர்.
ஏற்கனவே அகோரி மணிகண்டன், திருச்சி சங்கிலியாண்புரம் சுடுகாட்டில் நிர்வாணபூஜை செய்ததும், தலைச்சம் பிள்ளையின் ஏலும்புக்குகாக வீதியில் சுற்றிவந்ததும் பொதுமக்களிடையே பய உணர்வை ஏற்படுத்தியது. அப்போது கம்யூனிஸ் தோழர்கள் இணைத்து போலிசில் புகார் செய்து வலுகட்டா யமாக சுடுகாட்டில் இருந்து வெளியேற்றினார்கள் என்பது குறிப்பிடதக்கது.
எப்போதும் அகோரிகள் என்பவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருப்பார்கள். ஆனால் திருச்சி மாநகருக்குள்ளே கோவிலுக்கு இருப்பது திருச்சி மக்களிடையே பெரிய பய உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்