தமிழக முதலமைச்சர் மற்றும் காவல் துறையினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டு, தற்போது வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் கைது விவகாரம் தொடர்பாக, அவரின் மனைவி...
"கடந்த வாரம் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதுதான் தற்போது பரபரப்பாக்கப்பட்டிருக்கு. அன்றைய கூட்டம் முடிந்து அவர் வீட்டுக்கு வந்ததுமே, 'இன்னைக்கு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன். நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்'னு வருத்தப்பட்டார். 'இனி அப்படிப் பேச வேண்டாம்; நீங்க பொறுப்பான இடத்தில் இருக்கீங்க'னு சொன்னேன்.
அடுத்த சில நாள்கள் கழிச்சு அவரின் பேச்சுகள் அரசியல் காரணங்களால் பெரிதுபடுத்தப்பட்டுச்சு. என் கணவர் பேசிய முழு வீடியோவையும் பார்த்தேன் . ஆளும்கட்சியினர், அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால், என் கணவரால் சட்டமன்ற உறுப்பினராக நிறைவா பணிசெய்ய முடியலை. அவர் தொகுதி மக்களுக்கும் பெரிசா நல்லது பண்ண முடியலை. அந்த வருத்தத்தை முதல்வர் கவனத்துக்கும் கொண்டுபோனார். எதுவும் சரியாகலை.
அதனாலும், தமிழக மக்கள் பல விஷயங்களுக்காகப் பாதிக்கப்படுவதை இந்த மாநில அரசு வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பதை எதிர்த்தும்தான் அவர் அப்படிப் பேசினார். அப்போது, கோபத்தில் அவர் பேசிய சில கருத்துகள் தவறானதுதான். அதை அவரே ஒப்புக்கொண்டு, அதற்கு வருத்தமும் தெரிவிச்சு ட்டாரே! அதை நானும் ஒத்துகிறேன். அவர் பேசினது பிறரைப் புண்படுத்தியிருந்தால், அதற்கு என் கணவருடன் சேர்ந்து நானும் வருந்துறேன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்