அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி (தெற்கு மா.செ பொருப்பு), புதுக்கோட்டை மா.செ. பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், கவிதைப்பித்தன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர பொருப்பாளர்களும், பல்வேறு பிரிவு பொருப்பாளர்கள் உடன்பிறப்புகள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரிமழம் ஒ.செ. ராமலிங்கம் பேசும் போது... ரயில்ல கூட போக முடியல. எல்லாரும் குட்கா பற்றியே பேசுறாங்க. ஒன்றியத்துக்கு 10 தீவிரவாதிகளை உருவாக்கி விஜயபாஸ்கரை கொல்லனும் என்று பேசினார். அதே போல.. மாவட்ட கலை இலக்கிய பிரிவு துணைச் செயலாளரும் அமைச்சர் விஜயபாஸ்கரை விராலிமலைத் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டவருமாக தென்னலூர் பழனியப்பன் பேசும் போது.. அண்ணன் ரகுபதி பேசும் போது சொன்னார் அவர் செத்தால் தான் முடிவுக்கு வரும் என்றும், பரணி கார்த்திகேயன் (அ.ம.மு.க தெற்கு மா.செ) சொன்னது போல தேசிய கொடி இருக்கும் வரைதான் பவர். அதை கழட்டிய பிறகு வா.. ஓட ஓட விரட்டுவோம் என்று சொன்னார்.
நானும் விராலிமலைத் தொகுதி என்பதால் எங்கள் வாக்காளர்களும் வெளியே தலைகாட்ட முடியாமல் வெட்கித் தலைகுனிகிறோம். அதனால் ஒன்று ராமலிங்கம் சொன்னது நடக்கனும் இல்லன்னா ஆட்சி கலையனும் அப்ப தான் இந்த தமிழ்நாடு உருப்படும். தேசிய கொடி அவிழ்த்த பிறகு வந்தால் வேட்டியை அவித்துக் கொண்டு அம்மனமாக ஓட ஓட விரட்டுவோம் என்று பேசி முடித்தார்.
இந்த பேச்சுகளுக்காக அ.தி.மு.க வழக்கறிஞர் மச்சுவாடி கருப்பையா புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்.. அமைச்சர் விஜயபாஸ்கரை அச்சுருத்தும் வகையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தவர்கைள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு ள்ளது. எச்.ராஜா மீது வழக்கு, அடுத்து தி.மு.க வினர் மீது வழக்கு என்று புதுக்கோட்டையே பரபரப்பாக உள்ளது
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்