img
img

நடிகை விஜயசாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராகுல்காந்தி உத்தரவு
வியாழன் 20 செப்டம்பர் 2018 13:51:02

img

தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. தேர்தலில் தெலுங்கானா காங்கிரசாரை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய கமிட்டிகளை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். 

பிரசார கமிட்டி தலைவராக மல்லுப்பட்டி விக்ரமர்கா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரச்சாரத்தல் ஈடுபடுவோர் பட்டியலையும் ராகுல் அறிவித்துள்ளார். 

நடிகை விஜயசாந்திக்கு பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார்.நடிகையாக மட்டுமல்லாமல் தேர்தல் களத்தில் அனுபவமும் உள்ள வரான விஜயசாந்தியை நட்சத்திர பேச்சாளராக நியமித்ததால் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெலங்கானா மாநில முதல் முதலமைச்சராக இருந்த சந்திரசேகராவ் கட்சியான ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்தவர் விஜயசாந்தி. ஆந்திராவின் மெதக் தொகுதி எம்.பி.யாக இருந்தார். சந்திரசேகரராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி. சந்திரசேகராவ் கட்சியை எதிர்கொள்ள அவரது கட்சியில் இருந்த விஜயசாந்தியே சரியான தேர்வு என்று கட்சியினரிடம் கூறியிருக்கிறார் ராகுல்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img