img
img

எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”
செவ்வாய் 18 செப்டம்பர் 2018 13:43:59

img

யூ ஆர் ஆன்ட்டி இந்தியன் என பத்திரிகையாளர்களுடன் தகராறு.! திமுக எம்.பி.கனிமொழி பற்றி அவதூறாக டுவிட்டரில் பதிவிட்டு தி.மு.கவினரின் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டதோடு, சொந்த கட்சியினரால் விமர்சனத்துக்கு ஆளானவர் எச்.ராஜா.  அத்தோடு விட்டாரா இல்லை..!! பெரியார் சிலையை இடிப்பேன் என்று பதிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழினமே திறண்டதும் மண்டியிட்டு அட்மினை பழிகாடாக்கிய அசகாய சூரன் தான் எச்.ராஜா..! சிறுநீர் பாசனத்துறையை கண்டுபிடித்த விஞ்ஞானி..!

இப்பவும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துகிட்டு போகுது, மக்கள் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக திரும்பிட்டாங்க.! இதை நேக்கா மடை மாத்தனும்னா புதுசா ஒரு பிரச்சனையை உண்டு பண்ண வேண்டும் என்று போலீஸாரிடம் வான்டட்டாக வந்து வம்பு இழுத்திருக்கிறார்.  ஒன்றுக்கு 9 பிரிவுகளில் வழக்கும் பதிவு செஞ்சாச்சு. எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில் சேர்த்தாச்சு. எப்.ஐ.ஆர் பதிவு பண்ணி 3 நாட்கள் கழிந்துவிட்டது. ஆனால், இன்னும் காவல்துறை அரெஸ்ட் பண்ணலை. காரணம் அவர் ஒன்றும் அப்பாவி அல்ல. இந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கும் கட்சியின் முக்கிய புள்ளி. இதை அமைச்சர்களின் பேச்சில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

“சட்டப்படி வழக்கு பதிவு பண்ணியாச்சு…சட்டம் தன் கடமையை செய்யும்” - அமைச்சர் ஜெயக்குமார். (அப்பாடா.. அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாம பொதுவா பேசிட்டோம்). “எச்.ராஜாவின் பேச்சு கோபத்தின் வெளிப்பாடு, அதை அப்படித்தான் எடுத்துக் கொள்ளனும். அவரு டாக்டர்ட்ட போய் பி.பி. செக் பண்ணனும். அதுக்காக நம்ம போலீஸை சாதாரணமா எடை போடக் கூடாது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், கோழிக்குஞ்சை அமுக்கிற மாதிரி அமிக்கிறுவாங்க.” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (அப்புறம் என்ன….அமுக்கிட வேண்டிதானே?!)

‘’சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகிற அளவுக்கு எச்.ராஜா ஒன்றும் தப்பா பேசிடலை. அதனால கைது நடவடிக்கை இல்லை.’’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். (சரி…தான்..இதையே நீதிமன்றத்தில சொல்லுங்களேன் பார்ப்போம்)

பி.ஜே.பி. மாநில தலைவர் தமிழிசையை கெட்ட வார்த்தையால் திட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சூர்யா தேவியை 24 மணிநேரத்தில் கைது செய்தது காவல் துறை.  விமான பயணத்தின்போது தமிழிசையிடம் வாக்கு வாதம் செய்த சோபியாவை புகார் கொடுத்த ஒரு மணிநேரத்தில் கைது செய்தது இதே காவல் துறை.

எஸ்.வி.சேகருக்கு எதிரான கம்ப்ளைன்டை வச்சிகிட்டு அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இப்ப அதே பாணியைத் தான் எச்.ராஜா மீது எடுக்க மறுக்குது இந்த காவல் துறை.  எஸ்.வி.சேகராவது  பத்திரிகையாளர்களை கேவலப்படுத்தினார். ஆனால், எச்.ராஜா உங்களையும், நீதித்து றையையும் கேவலப்படுத்தியவர். இதில் நீங்க கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால். அவர் சொன்னது உண்மை ஆகிவிடும். ஆமா அவர் சொன்னது.. காவலர்களின் ஈரல் அழுகிவிட்டது..!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img