ஞாயிறு 04, டிசம்பர் 2022  
img
img

இளைஞர்கள் வன்புணர்வு செய்ய காரணம் இதுதான்- பாஜக பெண் எம்எல்ஏ
சனி 15 செப்டம்பர் 2018 17:15:35

img

அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டம் குருகிராம் நகரைச் சேர்ந்த 19 வயது மாணவி சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடி யிடம்  விருது பெற்றவர்.

இவர் கடந்த புதன்கிழமை சிறப்பு வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 12 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மாணவியின் புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர். பின்னர் அவர் காவல்துறை அதிகாரியிடம் புகாரை அளித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறம்போது, எனது மகள் நல்ல புத்திசாலி. நன்றாக படிப்பாள். சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றார். இப்போது என்னுடைய மகளின் நிலைமையை பாருங்கள். ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.

மோடி ஜி பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்கிறார். ஆனால் எப்படி? என் மகளுக்கு  நீதி கிடைக்க வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று சொன்னீர்களே மோடி ஜீ. என் மகளுக்கு நீதி கிடைக்குமா? போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உள்ளார்.

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என கூறி உள்ளார்.இந்நிலையில் இச்சம்ப வத்தை பற்றி பாஜக எம்எல்ஏ பிரேமலதா கூறுகையில்,” இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால்தான் பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்ற ங்களை செய்கிறார்கள் என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img