கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் சத்தியன். கடலூர் தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திட்டக்குடி தாசில்தாராக சத்தியன் இருந்த போது, நீர்நிலைகள், கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்பட ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
இந்நிலையில் இன்று காலை திருக்குளத்தை பார்வையிட வந்த விருத்தாசலம் ஆர்.டி.ஓ. சந்தோஷினி சந்திராவை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், திட்டக்குடி தாசில்தாராக சத்தியன் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்கள் என்றதுடன், தாசில்தார் இடமாற்றத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி திருக்குளம், கொடிகளம் பெரிய ஏரி உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் தாசில்தார் சத்தியன் இடமாற்றம் செய்யப்பட்டாரா என முற்றுகையிட்டவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஆர்.டி.ஓ. முயன்றார். இருப்பினும் முற்றுகையிட்டவர்கள் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சூரகுமாரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். முற்றுகையிட்டவர்களை சமாதானம் செய்து ஆர்.டி.ஓ.வை மீட்டு அனுப்பி வைத்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்